சோற்றுக்கு மிகவும் உருசியாக பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெசிபி | Bachelors EC Sambar Recipe !
#Cooking
#Vegetable
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் ;
- துவரம் பருப்பு - 200 கிராம்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்
- ரெடிமேட் சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்+ அரை டீஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- மிளகாய் வற்றல் -2
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 1
- முருங்கைக்காய் - 1
- கத்திரிக்காய் - சிறியது 5
- பீன்ஸ் - 10
- கேரட் - 1
- கருவேப்பிலை, மல்லி இலை - சிறிது
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு.
- பரிமாறும் அளவு - 4-6
செய்முறை :
- கத்திரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட்,, தக்காளி, மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய காய்கறியோடு, சின்ன வெங்காயம் 10, தக்காளி, புளிக்கரைசல், தேவைக்கு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும்.
- காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்குமாறு வைக்கவும். ஒரு விசில் தான் வைக்க வேண்டும். அதிக நேரம் வைத்தால் காய் குழைந்து விடும்.
- விருபினால் 5 சின்ன வெங்காய த்தை தாளிக்க நறுக்கி வைக்கவும். இல்லாவிடில் வெங்காயம் சேர்க்காம லும் தாளிக்கலாம்.
- குக்கரை திறந்தால் சாம்பாருக் கான காய் வெந்து இப்படி காணப்படும். நேரம் இருந்தால் தனியாக பாத்திரத்திலும் காய் வேக வைக்கலாம்.
- அத்துடன் வேக வைத்த பருப்பை கலந்து மல்லி இலை தூவி கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும். கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
- பின்பு தாளித்து கொட்ட ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை வெடித்ததும் சின்ன வெங்காயம் சிறிது நறுக்கியது சேர்த்து வதக்கி,
- அரை ஸ்பூன் சாம்பார் பொடி, பின்ச் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி உடன் ரெடியான சாம்பாரில் கொட்டவும்.
- தாளித்து கொட்டியதும் கலந்து விடவும். கமகமக்கும் பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெடி. இதனை காலையில் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்,
- மதியம் சோற்றுக்கு அருமையாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெறும் அப்பளம் இருந்தாலே போதும்.